Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மயிலாப்பூரில் பிரபலமான ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் கொரோனாவால் பலி

மயிலாப்பூரில் பிரபலமான ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் கொரோனாவால் பலி

By: Nagaraj Mon, 06 July 2020 9:40:15 PM

மயிலாப்பூரில் பிரபலமான ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் கொரோனாவால் பலி

சென்னை மயிலாப்பூரில் பிரபலமான ஜன்னல் கடை என்று அழைக்கப்படும் பஜ்ஜி கடையை நடத்தி வந்த ரமேஷ் என்பவர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது சென்னை மயிலாப்பூர் பகுதியில் பஜ்ஜிக்கு பெயர் போன ஜன்னல் கடை பஜ்ஜி கடை உரிமையாளர் ரமேஷ் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

window,barge shop,tamil nadu,corona,mylapore ,ஜன்னல், பஜ்ஜி கடை, தமிழகம், கொரோனா, மயிலாப்பூர்

சென்னை மயிலாப்பூரின் அடையாளமாக இருந்தவர் ஜன்னல் கடை உரிமையாளர் ரமேஷ். அவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு இருந்தது. சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே ஒரு சின்ன ஜன்னலில் ரமேஷ் பஜ்ஜி கடை நடத்தி வந்தார்.

அவரது கடையில் எப்போதும் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதும். மயிலாப்பூர் கோவில் வருபவர்கள் அவரது கடை பஜ்ஜி, போண்டாவை சாப்பிடாமல் போவதில்லை. ஜன்னலில் இருந்து அவர் பஜ்ஜியை விற்று வந்ததால் ஜன்னல் கடை என்று பெயர் வந்தது. 30 ஆண்டுகளாக பஜ்ஜி கடையை நடத்தி வந்த ரமேஷ் கொரோனாவால் உயிரிழந்த செய்தி மயிலாப்பூர் மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags :
|
|