Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொழிலாளர்களுக்கு விமானத்தில் டிக்கெட் எடுத்து ஊருக்கு அனுப்பி வைத்த விவசாயி

தொழிலாளர்களுக்கு விமானத்தில் டிக்கெட் எடுத்து ஊருக்கு அனுப்பி வைத்த விவசாயி

By: Nagaraj Thu, 28 May 2020 5:48:28 PM

தொழிலாளர்களுக்கு விமானத்தில் டிக்கெட் எடுத்து ஊருக்கு அனுப்பி வைத்த விவசாயி

தன்னிடம் வேலைப்பார்த்த தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தள்ளார் விவசாயி ஒருவர்.

டில்லியின் திகிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பாப்பன் சிங். இவர் காளான் உற்பத்தி செய்து வருகிறார்.

இவரிடம் பீகார் மாநிலம் சமஸ்திப்பூர் பகுதியை சேர்ந்த 10 கூலித்தொழிலாளர்கள் நீண்ட காலமாக வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல விரும்பியபோது, சிறப்பு ரெயில்களில் இடம் கிடைக்கவில்லை.
தனது தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு சைக்கிளிலோ, கால்நடையாகவோ சென்று கஷ்டப்படுவதை பார்க்க பாப்பன் சிங் விரும்பவில்லை.

farmer pappensing,workers,air ticket,patna ,
விவசாயி பாப்பன்சிங், தொழிலாளர்கள், விமான டிக்கெட், பாட்னா

10 பேருக்கும் டெல்லியில் இருந்து பீகாரின் தலைநகரான பாட்னாவுக்கு தனது சொந்தச்செலவில் விமான டிக்கெட்டுகளை பாப்பன் சிங் வாங்கித் தந்துள்ளார்.

மாதம் 25-ந் தேதியில் இருந்தே இவர்கள் அத்தனை பேருக்கும் உணவும், தங்குமிடமும் தந்து பராமரித்து வந்ததும் பாப்பன் சிங்தான்.
10 பேர் டெல்லியில் இருந்து பீகாரின் பாட்னாவுக்கு செல்ல விமான டிக்கெட் எவ்வளவு தெரியுமா? 68 ஆயிரம் ரூபாய். இந்த டிக்கெட்டுடன் 10 பேருக்கும் வழிச்செலவுக்கு பாப்பன் சிங் தலா ரூ.3,000 கொடுத்திருக்கிறார்.

10 பேரையும் தனது சொந்த வாகனங்களை கொண்டு பாப்பன் சிங், டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு அழைத்துச்சென்று விட்டதுதான்.

Tags :