Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய அரசானது, இணைய பாதுகாப்பு குறித்த ஓர் முக்கிய எச்சரிக்கை வெளியீடு

மத்திய அரசானது, இணைய பாதுகாப்பு குறித்த ஓர் முக்கிய எச்சரிக்கை வெளியீடு

By: vaithegi Fri, 14 Apr 2023 3:53:03 PM

மத்திய அரசானது, இணைய பாதுகாப்பு குறித்த ஓர் முக்கிய எச்சரிக்கை வெளியீடு

இந்தியா: 12,000 இந்திய அரசு இணையத்தளங்களை குறி வைத்துள்ள ஹேக்கர்ஸ் ... மத்திய அரசானது, இணைய பாதுகாப்பு பற்றி ஓர் முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை பதிவானது, மத்திய மாநில அரசு இணையதள பக்கங்கள் குறித்தது. அரசு இணையதள பக்கங்களை இந்தோனீசிய ஹேக்கர்கள் குறிவைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இது பற்றி , மத்திய அரசு, வெளியிட்ட இணைய பாதுகாப்பு குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தோனேசியாவைச் சேர்ந்த சைபர் தாக்குதல் குழுவானது, 12,000 இந்திய அரசு இணையதளங்களை குறிவைத்துள்ளது என்றும், அதனால் தரவுகளை பாதுகாப்பாக வைக்கவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

warning,internet security,govt ,எச்சரிக்கை ,இணைய பாதுகாப்பு,அரசு

இந்த எச்சரிக்கை அறிவிப்பை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் நேற்று ( வியாழக்கிழமை) வெளியிட்டது. மேலும், மாநில மற்றும் மத்திய அரசின் இணையதளங்கள் குறிவைக்கப்படலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு, ஒரு பெரிய இணையவழி தாக்குதலில், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான AIIMS அமைப்பின் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. அதில் பதியப்பட்ட பதிவுகளை மற்ற மருத்துவமனை சேவைகளை அணுக முடியாதபடி தாக்குதல் நடைபெற்றது.

Tags :