Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்த மத்திய அரசு

உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்த மத்திய அரசு

By: Nagaraj Wed, 22 June 2022 4:14:54 PM

உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்த மத்திய அரசு

புதுடில்லி: அக்னிபாத்' திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது எந்த முடிவையும் எடுக்கும் முன், நீதிமன்றம் தங்களது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

முப்படைகளுக்கும் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 17.5 முதல் 21 வயதுக்குட்பட்டவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பணியில் அமர்த்தப்படுவர். இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் ஏராளமான இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மட்டும் ஆட்சேர்ப்புக்கான அதிகபட்ச வயது வரம்பை 23 ஆண்டுகளாக மத்திய அரசு உயர்த்தியது. இருப்பினும், போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. அரசியல் தலைவர், ராணுவ வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் இத்திட்டத்தை விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இதுவரை உச்ச நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரி வழக்கறிஞர் ஹர்ஷ் அஜய் சிங் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இத்திட்டத்தின் அறிவிப்பு நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

caveat,petition filed,federal,supreme court,opinion ,கேவியட், மனு தாக்கல், மத்திய அரசு, உச்ச நீதிமன்றம், கருத்து

முன்னதாக, இந்தத் திட்டத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா மற்றும் விஷால் திவாரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்த மனுவில், அரசியலமைப்பு விதிகளுக்கு முரணாக, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், நூற்றாண்டு பழமையான ஆயுதப்படைகளுக்கான தேர்வு முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்துள்ள மனுவில், இந்தத் திட்டத்தால் தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், இத்திட்டத்திற்கு எதிராக நடைபெற்ற வன்முறையை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

அக்னிபாத்' திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது எந்த முடிவையும் எடுக்கும் முன், நீதிமன்றம் தங்களது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது

Tags :
|