Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் ஜுன் 22ம் தேதி மாஸ்டர் படத்தின் டிரைலரை வெளியிட படக்குழு முடிவு

வரும் ஜுன் 22ம் தேதி மாஸ்டர் படத்தின் டிரைலரை வெளியிட படக்குழு முடிவு

By: Nagaraj Sat, 30 May 2020 7:55:02 PM

வரும் ஜுன் 22ம் தேதி மாஸ்டர் படத்தின் டிரைலரை வெளியிட படக்குழு முடிவு

மாஸ்டர் படத்தின் டிரைலர் வரும் ஜுன் 22ம் தேதி வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது.

master,driller,june
vijay film,film crew ,மாஸ்டர், டிரைலர், ஜுன் 22ம் தேதி, விஜய் படம், படக்குழு

இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி சென்றுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ட்ரைலர் அல்லது டீசர் ஆவது வெளியிடுங்களேன் என ஏக்கத்துடன் கேட்டு வந்தனர். இதையடுத்து அவர்களுக்கு ஹேப்பி நியூஸ் வந்துடுச்சு.. படத்தை தீபாவளி திருநாளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

மேலும், வருகிற ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளில் இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. இன்னும் படக்குழு இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Tags :
|