Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான இறுதிக்கட்ட விவாதம் தொடக்கம்

டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான இறுதிக்கட்ட விவாதம் தொடக்கம்

By: Karunakaran Fri, 23 Oct 2020 3:32:17 PM

டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான இறுதிக்கட்ட விவாதம் தொடக்கம்

அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டெனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். இதனால் அங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

துணை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான மைக் பென்சை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அமெரிக்க தேர்தலை பொறுத்தவரை அதிபர், துணை அதிபர் வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்தித்து நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகவும் பிரபலமான தேர்தல் பிரசார நடைமுறை ஆகும்.

final debate,donald trump,joe biden us election ,இறுதி விவாதம், டொனால்ட் டிரம்ப், ஜோ பிடன் அமெரிக்க தேர்தல்

அதன்படி, அதிபர் வேட்பாளர்களான டொனால்டு டிரம்ப், ஜோ பிடனுக்கு இடையே கடந்த மாதம் 29-ம் தேதி ஓஹியோ மாகாணத்தில் முதல் நேரடி விவாதம் நடந்தது. அதிபர் வேட்பாளர்களின் 2-வது நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சி கடந்த 15-ம் தேதி புளோரிடா மாகாணத்தில் கொரோனா காரணமாக காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.

தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான இறுதிக்கட்ட விவாதம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கொரோனா வைரஸ் இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Tags :