Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மார்ச் மாதத்திற்குள் இறுதித்தேர்வை நடத்தி முடிக்க திட்டம்

மார்ச் மாதத்திற்குள் இறுதித்தேர்வை நடத்தி முடிக்க திட்டம்

By: Nagaraj Wed, 11 Nov 2020 10:11:01 PM

மார்ச் மாதத்திற்குள் இறுதித்தேர்வை நடத்தி முடிக்க திட்டம்

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக வருகிற மார்ச் மாதத்துக்குள் பள்ளி, கல்லூரிகளுக்கான இறுதித் தேர்வுகளை நடத்தி முடிக்க கல்வித்துறை அதிகாரிகள் இப்போதே திட்டமிட்டு வருகிறார்கள்.

தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் எந்த தேதியில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு மார்ச் முதல் வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலை நடத்துவதற்கும், ஓட்டு பெட்டிகளை பாதுகாப்பாக வைத்து எண்ணுவதற்கும் பள்ளி, கல்லூரி கட்டிடங்கள்தான் முழுமையாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த சூழலில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளன.

department of education,officers,examination,arrangements,school ,கல்வித்துறை, அதிகாரிகள், தேர்வு, ஏற்பாடுகள், பள்ளி

வருகிற 16-ந் தேதி பள்ளி, கல்லூரிகளை திறக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்தது. காலாண்டு தேர்வு நடத்தப்படாத சூழலில் தற்போது டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் போதிய கால இடைவெளி இல்லாத காரணத்தால் 40 சதவீத பாடங்களை குறைத்து நேராக முழு ஆண்டு தேர்வு எழுதும் வகையில் பாடங்கள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற மார்ச் மாதத்துக்குள் பள்ளி, கல்லூரிகளுக்கான இறுதித் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், அதற்கேற்ப பாடங்களை விரைந்து நடத்தி தேர்வுக்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் இப்போதே திட்டமிட்டு வருகிறார்கள்.

Tags :