Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜம்மு காஷ்மீரில் இன்று மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீரில் இன்று மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

By: Karunakaran Sat, 19 Dec 2020 09:02:53 AM

ஜம்மு காஷ்மீரில் இன்று மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த தேர்தலுடன் சேர்த்து உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நவம்பர் 28ம் தேதி தேர்தல் தொடங்கியது. இதுவரை 7 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் காலையில் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக உள்ளது. மற்ற இடங்களில் ஓரளவு வாக்காளர்களின் வருகை அதிகமாக இருந்தது. வாக்குச்சாவடிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. மதியம் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

final phase,district development council elections,jammu and kashmir,vote ,இறுதி கட்டம், மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல்கள், ஜம்மு-காஷ்மீர், வாக்களித்தல்

ஜம்முவில் 15 தொகுதிகள், காஷ்மீர் பிராந்தியத்தில் 13 தொகுதிகள் என மொத்தம் 28 மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. 168 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதுதவிர உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர் பதவிகள் தவிர, மீதமுள்ள பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 84 பஞ்சாயத்து தலைவர்கள், 285 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் 6.40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 1703 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி), மக்கள் மாநாடு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியை உருவாக்கி முதல் முறையாக தேர்தலை சந்திக்கின்றன. தேசிய கட்சிகளான பாஜக, மற்றும் காங்கிரசும் களத்தில் உள்ளன.


Tags :