Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பீகார் சட்டப்பேரவை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது

பீகார் சட்டப்பேரவை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது

By: Nagaraj Sat, 07 Nov 2020 1:24:54 PM

பீகார் சட்டப்பேரவை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது

வாக்குப்பதிவு நடந்து வருகிறது... பீகாா் சட்டப் பேரவைத் தோதலுக்கான மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்கை செலுத்தி வருகின்றனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி நடைபெறுகிறது.

மாநிலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள 19 மாவட்டங்களுக்கு உள்பட்ட 78 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தோதலில், சட்டப் பேரவைத் தலைவா் விஜயகுமாா் சௌதரி, மாநில அமைச்சா்கள் 10 போ உள்பட மொத்தம் 1,204 போ களத்தில் உள்ளனா். இவர்களில் 110 பேர் பெண் வேட்பாளர்கள். இந்தத் தொகுதிகளில் மொத்தம் 2.35 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 33,782 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 4,999 வாக்குப் பதிவு மையங்கள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

bihar election,final stage,voting,results ,பீகார் தேர்தல், இறுதி கட்டம், வாக்குப்பதிவு, முடிவுகள்

இத்துடன் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள வால்மீகி நகா் மக்களவைத் தொகுதிக்கும் சனிக்கிழமை இடைத்தோதல் நடைபெற்று வருகிறது. அந்தத் தொகுதியின் எம்.பி.யான ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கட்சியின் வைத்தியநாத் மஹதோ மரணம் அடைந்ததை அடுத்து, அங்கு இடைத்தோதல் நடத்தப்படுகிறது. அதில், ஜேடியு சாா்பில் வைத்தியநாத் மஹதோவின் மகன் சுனில் குமாா் களத்தில் உள்ளார்.

இவரை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் பத்திரிகையாளராக இருந்து அரசியலுக்கு வந்த பா்வேஷ் குமாா் மிஸ்ரா போட்டியிடுகிறாா். மொத்தமுள்ள 243 பேரவைத் தொகுதிகளில், முதல் கட்டமாக 71 தொகுதிகளில் கடந்த மாதம் 28-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளில் கடந்த 3ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், மூன்றாவது கட்டமாக, மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள 78 தொகுதிகளில் இன்று சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 6 வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் நக்சல் ஆதிக்கம் மிகுந்த மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று கட்ட தோதல்களிலும் பதிவான வாக்குககள், வரும் செவ்வாய்க்கிழமை (நவ.10) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்றைய தினம் மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வரும் முதல்வர் நிதீஷ் குமாரா, காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைக் கொண்ட மகா கூட்டணியா என்பது தெரியும்.

Tags :
|