Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியிடப்படும் - ரஷிய சுகாதார மந்திரி

கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியிடப்படும் - ரஷிய சுகாதார மந்திரி

By: Karunakaran Thu, 13 Aug 2020 09:55:41 AM

கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியிடப்படும் - ரஷிய சுகாதார மந்திரி

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இந்தியா போன்ற நாடுகள் இடையே போட்டி நிலவுகிறது. இந்நிலையில் கொரோனா வைரசை தடுத்து நிறுத்த முதல் தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்துள்ளதாக நேற்று முன்தினம் ரஷியா அறிவித்தது. ரஷியாவின் இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

first batch,corona vaccine,russian health minister,mikhail murashko ,முதல் தொகுதி, கொரோனா தடுப்பூசி, ரஷ்ய சுகாதார அமைச்சர், மைக்கேல் முராஷ்கோ

இந்நிலையில் இதுகுறித்து மாஸ்கோவில் ரஷிய சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ நேற்று பேட்டி அளித்தபோது, கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்த தடுப்பூசி தானாக போட்டுக்கொள்ள முன்வருவோருக்கு போடப்படும் என்று கூறினார்.

மேலும் அவர், ஏற்கனவே ஏறத்தாழ 20 சதவீத டாக்டர்கள் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி தேவைப்படாது. ரஷிய மக்களின் தேவைக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும். அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். இதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கூறினார்.

Tags :