Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் இன்று முதல் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு

டெல்லியில் இன்று முதல் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு

By: Nagaraj Thu, 15 Oct 2020 2:09:34 PM

டெல்லியில் இன்று முதல் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு

விழிப்புணர்வு பிரசாரம்... டெல்லியில் காற்றின் தரக்குறியீடு குளிர்காலத்தில் மிகவும் மோசமாக இருக்கும். அதற்கான அறிகுறிகள் தற்போதே தென்பட்டு விட்டன. எனவே, காற்றின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை டெல்லி அரசு மேற்கொண்டு உள்ளது.

இந்த நிலையில், வரவிருக்கும் குளிர்காலத்தை கருத்தில் கொண்டு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) இன்று முதல் டெல்லி-என்.சி.ஆரில் 50 குழுவினர் இன்று முதல் (வியாழக்கிழமை) வருகிற பிப்ரவரி 28-ந் தேதி வரை டெல்லி மற்றும் தலைநகரை ஒட்டியுள்ள பிற மாநில நகரங்களில் விரிவான ஆய்வை மேற்கொள்ள உள்ளனர்.

recommendation,junk,inspection,action,industry ,பரிந்துரை, குப்பைகள், ஆய்வு, நடவடிக்கை, தொழில்துறை

குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை சாலைகள் மற்றும் திறந்தவெளிகளில் கொட்டுதல், தொழில்துறை கழிவுகளை திறந்த வெளியில் எரித்தல் போன்ற மாசுபடுத்தும் முக்கிய ஆதாரங்களை இவர்கள் திரட்ட இருக்கிறார்கள்.

இதுகுறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்யப்படவும் உள்ளது.

Tags :
|
|