Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதன் முதலாக மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்யக்கூடிய தடுப்பூசி மருந்து சீனாவில் உருவாக்கம்

முதன் முதலாக மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்யக்கூடிய தடுப்பூசி மருந்து சீனாவில் உருவாக்கம்

By: Karunakaran Fri, 11 Sept 2020 2:18:52 PM

முதன் முதலாக மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்யக்கூடிய தடுப்பூசி மருந்து சீனாவில் உருவாக்கம்

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இருப்பினும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

உலகளவில் கொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 83 லட்சத்து 14 ஆயிரத்து 732 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 70 லட்சத்து 75 ஆயிரத்து 377 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

corona vaccine,corona virus,nasal spray,china ,கொரோனா தடுப்பூசி, கொரோனா வைரஸ், நாசி தெளிப்பு, சீனா

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்காக முதன் முதலாக மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்யக்கூடிய தடுப்பூசி மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் பல்கலைக்கழகம், ஜியாமென் பல்கலைக்கழகம், பீஜிங் வாண்டாய் உயிரியல் மருந்தகம் ஆகியவற்றின் கூட்டு தயாரிப்பாகும்.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு சீன தேசிய மருத்துவ தயாரிப்புகள் கழகம் தனது ஒப்புதலை அளித்துள்ளது. இந்த மருத்துவ பரிசோதனை நவம்பர் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இதில் 100 பேருக்கு மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்து அதன் விளைவுகள் ஆராயப்படும் என கூறப்பட்டுள்ளது.

Tags :