Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல்கட்ட சிறப்புத் தவணை தடுப்பூசி முகாம்.. இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை நடக்கிறது

முதல்கட்ட சிறப்புத் தவணை தடுப்பூசி முகாம்.. இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை நடக்கிறது

By: vaithegi Mon, 07 Aug 2023 2:41:56 PM

முதல்கட்ட சிறப்புத் தவணை தடுப்பூசி முகாம்.. இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை நடக்கிறது


இந்தியா: தேசிய தடுப்பூசி அட்ட வணையின்கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இதையடுத்து அதன்படி, காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம் பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ஃப்ளூயன்ஸா தொற்று, நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை மற்றும் ரூபெல்லாநோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், விட்டமின்-ஏ குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனை அடுத்து இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 9.40 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 11 ஆயிரம் இடங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அளிக்கப்படுகின்றன.

vaccination camp,national immunization network ,தடுப்பூசி முகாம்,தேசிய தடுப்பூசி அட்ட வணை

இந்த நிலையில் தமிழகத்தில் ஏதாவது ஒரு தவணை தடுப்பூசியைத் தவறவிட்ட 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் 60 ஆயிரம் பேர் உள்ளதாக பொது சுகாதாரத் துறை தரவுகளில் தெரியவந்து உள்ளது. தடுப்பூசியைத் தவறவிட்டவர்களுக்கான இந்திரதனுஷ் 5.0 சிறப்புத் தவணை தடுப்பூசி முகாமை 3 கட்டங்களாக நடத்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

எனவே அதன்படி, முதல் கட்ட முகாம் ஆகஸ்ட் 7 முதல் 12-ம்தேதி வரை நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்ட முகாம் செப்டம்பர் 11 முதல் 16-ம் தேதி வரையிலும், மூன்றாம் கட்ட முகாம் அக்டோபர் 9 முதல் 14-ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.


Tags :