Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது

தமிழகத்தில் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது

By: vaithegi Fri, 24 June 2022 2:38:47 PM

தமிழகத்தில்  இன்று முதல்  தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது


தமிழகம்: தமிழகத்தில் கடந்த 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 2022 – 2023 ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் நடைபெற தொடங்கியது. இந்த நிலையில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் மதிப்பீடு பணிகள் நடைபெற்று வந்தது.

இதனையடுத்து கடந்த ஜூன் 20ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பிற்கும் மதியம் 1 மணிக்கு 10ம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.

2021 – 2022ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வில் 12ம் வகுப்பில் மொத்தம் 7.55 (93%) லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.36% பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 10ம் வகுப்பில் 90.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

score certificate,students,pass ,மதிப்பெண் சான்றிதழ் ,மாணவிகள் ,தேர்ச்சி

இதில் 4,52,499 மாணவிகளும் 4,60,120 மாணவர்கள் ஆவார். அதனை தொடர்ந்து ஜூன் 24ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணிகள் தொடங்கி உள்ளது. www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் 1மணி முதல் பிறந்த தேதி ,பதிவு எண் ஆகிய விவரங்களை உள்ளீட்டு சான்றிதழ் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :