Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வென்டிலேட்டர்களின் முதல் தொகுப்பு அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படும் - அமெரிக்கா அதிபர் டிரம்ப்

வென்டிலேட்டர்களின் முதல் தொகுப்பு அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படும் - அமெரிக்கா அதிபர் டிரம்ப்

By: Monisha Thu, 04 June 2020 11:04:41 AM

வென்டிலேட்டர்களின் முதல் தொகுப்பு அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படும் - அமெரிக்கா அதிபர் டிரம்ப்

இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்கா அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவுக்கு நன்கொடையாக அறிவிக்கப்பட்ட 100 வென்டிலேட்டர்களின் முதல் தொகுப்பு, அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்த உரையாடலின்போது, பிரதமர் மோடியுடன் டிரம்ப் ‘ஜி-7’ உச்சி மாநாடு, கொரோனா வைரஸ் தொற்று பரவல், பிராந்திய விஷயங்கள் என பலவற்றை குறித்தும் விவாதித்தார் என வாஷிங்டன் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ventilators,us president trump,prime minister modi,corona virus,g7 summit ,வென்டிலேட்டர்கள்,அமெரிக்கா அதிபர் டிரம்ப்,பிரதமர் மோடி,கொரோனா வைரஸ்,ஜி7 உச்சி மாநாடு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் தான் நடத்திய பேச்சு குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவுகள் வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

எனது நண்பர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் உரையாடினேன். அது அன்பானதும், பயனுள்ளதுமானது. கொரோனா வைரஸ் தொற்று நோய் மற்றும் பல பிரச்சினைகள் குறித்த அவரது திட்டங்களை நாங்கள் விவாதித்தோம்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிந்தைய உலகளாவிய கட்டமைப்பில் இந்திய, அமெரிக்க ஆலோசனைகளின் செழுமையும், ஆழமும் அப்படியே இருக்கும். இவ்வாறு மோடி அந்த பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :