Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • யாழ்., போதனா வைத்தியசாலையில் முதல்முறையாக நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

யாழ்., போதனா வைத்தியசாலையில் முதல்முறையாக நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

By: Nagaraj Mon, 23 Jan 2023 10:53:30 PM

யாழ்., போதனா வைத்தியசாலையில் முதல்முறையாக நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

யாழ்ப்பாணம்: முதல்முறையாக சிறுநீரக மாற்று அறுவை... யாழ்.போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

student,kidney,transplant,health,success,treatment ,மாணவி, சிறுநீரகம், மாற்று அறுவை, நலம், வெற்றி, சிகிச்சை

சிறுமிக்கு அவரது தாயார் வழங்கிய சிறுநீரகம் பொருத்தப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் பி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். சத்திரசிகிச்சை நிபுணர் தம்பிலி தவசேந்தன் தலைமையிலான மருத்துவ குழுவினர் வெற்றிகரமான சத்திரசிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|