Advertisement

சீனாவில் இன்று முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி

By: Nagaraj Mon, 20 July 2020 2:32:06 PM

சீனாவில் இன்று முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி

கொரோனோ தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக பல மாதங்களாக சீனாவில் திரையரங்கள் மூடப்பட்டு கிடக்கிறது. தற்போது கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சீனாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதையடுத்து, திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

china,theaters,starting today,opening,action ,சீனா, திரையரங்குகள், இன்று முதல், திறப்பு, நடவடிக்கை

பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் இன்று 20 முதல் திரையரங்குகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக சீனா திரைப்பட நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, ஆன்லைனில் முன்பதிவு செய்து முகமூடி அணிதல், உடல் வெப்பநிலை அளவீடு உள்ளிட்ட நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த நிபரந்தனைகளுடன் 30 சதவீதத்துக்கும் குறைவான பார்வையாளர்கள் திரைப்படம் பார்க்க அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் இன்று முதல் சீனாவில் திரையரங்குகளில் படங்கள் பார்க்கலாம்.

Tags :
|