Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெருக்கடி கொடுக்கும் முதல்வர்; டில்லி மருத்துவ சங்கம் கடும் கண்டனம்

நெருக்கடி கொடுக்கும் முதல்வர்; டில்லி மருத்துவ சங்கம் கடும் கண்டனம்

By: Nagaraj Sun, 07 June 2020 8:01:59 PM

நெருக்கடி கொடுக்கும் முதல்வர்; டில்லி மருத்துவ சங்கம் கடும் கண்டனம்

முதல்வருக்கு கண்டனம்... கொரோனா வைரஸ் நோயாளிகளை அனுமதிப்பது தொடர்பாக தனியார் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு டில்லி முதல்வர் விடுத்த எச்சரிக்கைகளையும், மிரட்டலையும் கடுமையாக கண்டிப்பதாக டில்லி மருத்துவ சங்கம் கூறியுள்ளது.

தலைநகர் டில்லியில் நேற்று புதிதாக 1,320 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் கொரோனா பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 27,654 ஆகியுள்ளது. 761 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் செய்தியாளர்களை சந்தித்தார் டில்லி முதல்வர் கெஜ்ரிவால்.

cm,pressure,doctors,association,infection crisis ,முதல்வர், அழுத்தம், மருத்துவர்கள், சங்கம், தொற்று நெருக்கடி

அப்போது கொரோனா வைரஸ் நோயாளிகளை அனுமதிக்காமலிருக்க தனியார் மருத்துவமனைகள் கூறும் பொய்யான காரணங்களை சகித்துக்கொள்ள முடியாது. சில தனியார் மருத்துவமனைகள் முதலில் படுக்கை இல்லை என்று கூறுகின்றன. நோயாளிகள் வற்புறுத்தினால் பெரிய தொகையை கோருகின்றனர்.

இது படுக்கையை கள்ளச் சந்தை செய்வது ஆகாதா? நோயாளிகள் மருத்துவமனைகளால் திருப்பி அனுப்பப்படுவதை தடுக்கவும், படுக்கைகள் குறித்த தகவல்களை நோயாளிகள் அறியவும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் டில்லி அரசு மருத்துவ அதிகாரிகளை நியமிக்கும் என்றார்.


cm,pressure,doctors,association,infection crisis ,முதல்வர், அழுத்தம், மருத்துவர்கள், சங்கம், தொற்று நெருக்கடி

மேலும் கொரோனா வைரஸ் சோதனைகளை பதிவு செய்வதில் விதிகளை மீறியதாக கூறி முன்னணி தனியார் மருத்துவமனையான சர் கங்கா ராம் மருத்துவமனையின் அதிகாரிகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.இதனை கண்டித்து டில்லி மருத்துவ சங்கம் காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: டில்லி மக்களுக்கு கடந்த 2 மாதங்களாக தங்கள் உயிரைப் பணயம் வைத்து மருத்துவர்கள் அயராது சேவை செய்கின்றனர். அவர்கள் அவமானப்படுத்தப்படுவதாக உணர்கிறார்கள். மருத்துவமனைகள் சுகாதார துறையின் முதுகெலும்பு. அவர்கள் கொரோனா மற்றும் கொரோனா இல்லாத நோயாளிகளுக்கும் சேவை செய்கின்றனர்.அவர்களின் முயற்சிகளைப் பாராட்டுவதற்குப் பதிலாக அரசாங்கம் அபராதம் விதிக்கிறது.

தினசரி புதிய கட்டளைகளை வெளியிடுகிறது. தொற்று நெருக்கடியின் இந்த சமயத்தில் டில்லி மருத்துவர்கள் ஏற்கனவே அதிக வேலை மற்றும் அதிக மன அழுத்தத்தில் உள்ளனர். அவர்களுக்கு மாநில அரசு தேவையில்லாமல் அழுத்தம் கொடுக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|