Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இன்று (ஜூன் 23) முதல் ரயில் டிக்கெட்டு முன்பதிவு தொடக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இன்று (ஜூன் 23) முதல் ரயில் டிக்கெட்டு முன்பதிவு தொடக்கம்

By: vaithegi Thu, 23 June 2022 12:13:36 PM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில்  இன்று (ஜூன் 23) முதல் ரயில் டிக்கெட்டு முன்பதிவு தொடக்கம்

தமிழகம்: பல்வேறு தொழில்கள் மற்றும் படிப்புகள் நிமித்தம் சென்னைக்கு புலம்பெயர்ந்துள்ள மக்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருவது வழக்கமா ஒன்று.

இந்த நாட்களில் தலைநகர் சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் மற்றும் நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுவது உண்டு. மேலும், இந்த விடுமுறை நாட்களுக்காக பயணிகள் தங்களது பேருந்து மற்றும் ரயில் பயணங்களை முன்கூட்டியே பதிவு செய்து வைத்துக் கொள்ளும் சேவைகளும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு வரும் அக்டோபர் 24ம் தேதியன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புபவர்கள் ரயில் பயணங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

train ticket,deepavali,chennai ,ரயில் டிக்கெட்டு ,தீபாவளி ,சென்னை

அந்த வகையில் தீபாவளி வருவதற்கு 120 நாட்களுக்கு முன்பு பயணிகள் தங்களது டிக்கெட்டுகளை இன்று (ஜூன் 23) முதல் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த டிக்கெட்டுகளை பயணிகள் ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். இப்போது, பண்டிகைக்கு முன்னதாக அக்டோபர் 21ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதால் இதற்கான டிக்கெட் முன்பதிவுகளை இன்று செய்யலாம்.

அதே போல அக்டோபர் 22ம் தேதி பயணம் செய்பவர்கள் வரும் 24ம் தேதியும், அக்டோபர் 23ம் தேதி பயணம் செய்பவர்கள் 25ம் தேதியும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

Tags :