Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

வரும் நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

By: Nagaraj Tue, 22 Sept 2020 2:34:58 PM

வரும் நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

கொரோனா அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகள் இதுநாள் வரை திறக்கப்படாமல் இருந்தது. இதில் சில மாநிலங்களில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் நவம்பர் 1ம் தேதி கல்லூரி முதலாமாண்டு வ!குப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பை மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

colleges,bachelors,masters,november 1st,classes ,கல்லூரிகள், இளநிலை, முதுநிலை, நவம்பர் 1ம் தேதி, வகுப்புகள்

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் திறப்பு குறித்து ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டிருக்கும் அட்டவணையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

அதன்படி, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :