Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொழில்நுட்ப கோளாறுகளால் விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன

தொழில்நுட்ப கோளாறுகளால் விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன

By: Nagaraj Sun, 17 July 2022 11:09:52 PM

தொழில்நுட்ப கோளாறுகளால் விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன

புதுடெல்லி: அவசரமாக தரையிறக்கப்பட்டன... கடந்த 48 மணி நேரத்தில் மூன்று விமானங்கள் நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளன.

கோழிக்கோட்டில் இருந்து துபாய்க்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் B737-800 என்ற விமானம், விமானத்தின் முன்பகுதியில் உள்ள துவாரம் ஒன்றில் இருந்து தீ எரியும் நாற்றம் வீசியதால், இன்று மஸ்கட் நோக்கி திருப்பி விடப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

airplanes,technology,malfunctions,landed,airport ,
விமானங்கள், தொழில்நுட்பம், கோளாறுகள், தரையிறக்கப்பட்டன, விமான நிலையம்

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் என்ஜின், மற்றும் துணை சக்தி அலகு இரண்டிலும் புகை, தீ எதுவும் காணப்படவில்லை. விமானம் பத்திரமாக மஸ்கட்டில் தரையிறக்கப்பட்டது. கடந்த 48 மணி நேரத்தில், சர்வதேச விமான நிறுவனங்களின் மூன்று விமானங்கள் நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் ஹைட்ராலிக் கோளாறு காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்சின் விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நேற்று அடிஸ் அபாபாவிலிருந்து பாங்காக் சென்ற எத்தியோப்பியன் ஏர்லைன்ஸின் விமானம் அழுத்தம் காரணமாக கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அனைத்து விமானங்களும் தொழில்நுட்ப கோளாறுகளின் காரணமாகவே அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணைக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

Tags :
|