Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக சரிவு

By: vaithegi Sat, 10 Sept 2022 11:09:14 AM

மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக சரிவு

மேட்டூர் : ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.இதனை அடுத்து மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

இதையடுத்து அணையின் முழு கொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த சில நாட்களாகவே அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. எனவே அதன்படி அணையில் இருந்து இன்று காலை 65 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

mettur,neervarathu ,மேட்டூர் ,நீர்வரத்து

மேலும் இதில் 23 ஆயிரம் கன அடி தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாகவும், 42 ஆயிரம் கன அடி தண்ணீர் 16 கண் மதகான உபரி நீர் போக்கி வழியாகவும் , 400 கன அடி தண்ணீர் கால்வாயிலும் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் காவிரியில் கரை புரண்டு ஓடுவதால் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இதனால் காவிரியில் குளிக்கவும், துணி துவைக்கவும் தொடர்ந்து தடை நீடிக்கிறது.

Tags :
|