Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது

By: vaithegi Fri, 13 Oct 2023 12:00:39 PM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது


மேட்டூர் : மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தாமரைக்கரை, தட்டக்கரை, பர்கூர், சென்னம்பட்டி வனப் பகுதிகளில் கடந்தசில நாட்களாகவே பரவலாக மழைபெய்து வருவதால், காவிரியின் துணை ஆறான பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

அதேபோன்று, சின்னாறு, தொப்பையாறு பகுதிகளிலும் மழைபெய்ததால், பாலாறு, காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.மேட்டூர் அணைக்கு கடந்த 9-ம் தேதி விநாடிக்கு 122 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 10-ம் தேதி 163 கனஅடியாகவும், நேற்று முன்தினம் 2,528 கனஅடியாகவும், நேற்று காலை 9,345 கனஅடியாகவும் அதிகரித்தது.

mettur dam,water supply ,மேட்டூர் அணை,நீர்வரத்து


இந்த நிலையில், நேற்று மாலை4 மணிக்கு விநாடிக்கு 18,974 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட, நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைநீர்மட்டம் உயரத் தொடங்கிவுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 31.31 அடியிலிருந்து 34.30 அடியாகவும், நீர் இருப்பு 8.05 டிஎம்சியிலிருந்து 9.34 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, பிற்பகலில் 9,500 கனஅடியாக அதிகரித்திருந்தது. இந்த நிலையில், நேற்று காலை விநாடிக்கு 10ஆயிரம் கனஅடியாகவும், மாலைவிநாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்து அதிகரித்தது.இதன் இடையே, காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் தடைவிதித்து தருமபுரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

Tags :