Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது

By: vaithegi Sun, 15 Oct 2023 10:12:06 AM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது

மேட்டூர் : அணைக்கு 18,633 கனஅடி நீர்வரத்து ... அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 15,606 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 15,260 கன அடியாக சரிந்தது. எனினும், மாலையில் நீர்வரத்து18,633 கனஅடியாக அதிகரித்தது.

அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், அணையின்நீர்மட்டம் கடந்த 4 நாட்களாகஉயரத் தொடங்கியுள்ளது. அணை நீர்மட்டம் 39.63 அடி, நீர் இருப்பு 11.90 டிஎம்சியாகவுள்ளது.

mettur dam,water supply , மேட்டூர் அணை,நீர்வரத்து

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன் தினம் காலை 6 மணிக்கு விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தது.

ஆனால், முற்பகலில் 13 ஆயிரம் கனஅடியாகவும், மாலையில் 14 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது. இதையடுத்து நேற்று காலை விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி என்ற நிலையில் நீர்வரத்து இருந்தது. ஆனால், நேற்று மாலையில் விநாடிக்கு 9,000 கனஅடியாக குறைந்தது.


Tags :