Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது

By: Nagaraj Sat, 24 June 2023 11:47:50 AM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை நம்பி, ஒகேனக்கல், மேட்டூர் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்ற இறக்கமாக உள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 14-வது நாளாக வினாடிக்கு 1000 கனஅடி நீர்வரத்து நீடிக்கிறது. அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 223 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 153 கன அடியாக சரிந்துள்ளது.

7 feet,11 days,rainfall,in the cauvery,catchment areas,water inflow drops ,11 நாட்கள், 7 அடி குறைந்தது, நீர்வரத்து 153 கன அடியாக குறைவு, மேட்டூர் அணை நீர்மட்டம்

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவை விட நீர்வரத்து குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

நேற்று 96.24 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 95.53 அடியாக சரிந்துள்ளது. கடந்த 11 நாட்களில் நீர்மட்டம் 7.11 அடி குறைந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கைகொடுத்தால் மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து சாகுபடிக்கு முழு நீர்வரத்து கிடைக்கும் என்பதால் டெல்டா விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags :
|