Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 12 ஆயிரத்து 303 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மீண்டும் சரிவு

மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 12 ஆயிரத்து 303 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மீண்டும் சரிவு

By: vaithegi Fri, 30 Sept 2022 12:06:16 PM

மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 12 ஆயிரத்து 303 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மீண்டும் சரிவு

மேட்டூர்: கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மீண்டும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 9 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

இதையடுத்து மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 12 ஆயிரத்து 303 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மீண்டும் சரிந்து விநாடிக்கு 10 ஆயிரத்து 497 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

mettur dam,water supply , மேட்டூர் அணை,நீர்வரத்து

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்கு நேற்று 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 900 கன அடி தண்ணீரும் என்று மொத்தம் 10 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.நேற்று 118.76 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 118.72 அடியானது.

Tags :