Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விருதை திருப்பி அனுப்பிய முன்னாள் முதல்வர்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விருதை திருப்பி அனுப்பிய முன்னாள் முதல்வர்

By: Nagaraj Sat, 05 Dec 2020 7:14:17 PM

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விருதை திருப்பி அனுப்பிய முன்னாள் முதல்வர்

விருதை திருப்பி அனுப்பினார்... விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் , தனக்கு மத்திய அரசு வங்கிய பத்ம விபூஷன் விருதை திருப்பி அனுப்பியுள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, அண்மையில் 3 புதிய விவசாய திருத்தச் சட்டங்களை கொண்டு வந்து அமுல்படுத்தியது. இந்த சட்டம் அம்பானி போன்ற பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டி நாடு முழுவதும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் கொட்டும் மழை, கடும் குளிர் ஆகியவற்றுக்கு இடையே விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

மேலும், இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் வலுத்து வருகிறது.மத்திய அரசு அறிவித்துள்ள இந்தச் சட்டங்களுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிரோமணி அகாலி தள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

farmers,support,former chief minister,punjab,award ,விவசாயிகள், ஆதரவு, முன்னாள் முதல்வர், பஞ்சாப், விருது

மேலும், விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டம் என்றும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் இதுகுறித்து விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் திருப்பி அளித்துள்ளார்.
மத்திய அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

விவசாயிகள் விவகாரத்தில் பாஜகவுடன் முரண்பட்டு பஞ்சாப்பில் உள்ள அகாலிதளம் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியள்ளது குறிப்பிடத்க்கது.

Tags :
|