Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாலம் திடீரென இடிந்ததால் ஆற்றில் விழுந்தது சரக்கு ரயில்

பாலம் திடீரென இடிந்ததால் ஆற்றில் விழுந்தது சரக்கு ரயில்

By: Nagaraj Sun, 25 June 2023 10:45:26 PM

பாலம் திடீரென இடிந்ததால் ஆற்றில் விழுந்தது சரக்கு ரயில்

அமெரிக்கா: பாலம் இடிந்ததால் ஆற்றில் விழுந்த சரக்கு ரயில்... அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில், ஆற்றுப்பாலம் திடீரென இடிந்ததில் அதன் மீது சென்ற சரக்கு ரயில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

ஸ்டில்வாட்டர் பகுதியில் உள்ள யெல்லோஸ்டோன் ஆற்றின் மீது ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை அந்த பாலத்தின் மீது, கந்தகம் மற்றும் தார் சாலை போட பயன்படுத்தப்படும் கான்கிரிட் கலவையை ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் சென்ற போது, பாலம் இடிந்ததில், ரயில் ஆற்றில் கவிழ்ந்தது. இதில் ரயில் ஓட்டுநர்கள் காயங்களுடன் உயிர்தப்பினர்.

sulphur,spilled into the river,investigation,drinking water,bridge,collapsed ,கந்தகம், ஆற்றில் கொட்டியது, விசாரணை, குடிநீர், பாலம், இடிந்தது

ரயிலில் இருந்த கந்தகம் ஆற்றில் கொட்டியதால், ஆற்றிலிருந்து குடிநீர் எடுக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாலம் இடிந்ததில் அதன் மீது சென்ற ஃபைபர்-ஆப்டிக் கேபிள்களும் சேதமடைந்ததால் இணைய சேவையும் பாதிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags :
|