Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரெஞ்சு ராணுவம் ஒரு வாரத்திற்குள் வெளியே நைஜர் ராணுவம் கெடு

பிரெஞ்சு ராணுவம் ஒரு வாரத்திற்குள் வெளியே நைஜர் ராணுவம் கெடு

By: Nagaraj Sat, 26 Aug 2023 12:19:17 PM

பிரெஞ்சு ராணுவம் ஒரு வாரத்திற்குள் வெளியே நைஜர் ராணுவம் கெடு

நைஜர்: கெடு விதிப்பு... அண்மையில் புரட்சி மூலம் ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்ற ஆப்பிரிக்க நாடான நைஜரில் பிரெஞ்சு ராணுவம் ஒரு வார காலத்துக்குள் வெளியேற வேண்டும் என கெடு விதித்துள்ளனர்.

கடந்த ஜூலை 26ந்தேதி அன்று ஆட்சிக் கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய நைஜரின் ஆட்சிக்குழு, 48 மணி நேரத்திற்குள் பிரெஞ்சுத் தூதரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.

strong discontent,niger,military,impeachment,coup ,கடும் அதிருப்தி, நைஜர், ராணுவம், கெடு விதிப்பு, ஆட்சி கவிழ்ப்பு

அண்டை நாடுகளான புர்கினா பாசோ மற்றும் மாலியில் அண்மையில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புகளைப் போலவே, நைஜரிலும் ராணுவத்தால் அரசு கையகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நைஜரில் இருந்து பிரெஞ்சு ராணுவம் ஒரு வார காலத்துக்குள் வெளியேற வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|