Advertisement

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு இன்று தொடக்கிறது

By: vaithegi Sat, 09 Sept 2023 10:40:39 AM

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு இன்று தொடக்கிறது

புதுடெல்லி: ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று மிக கோலாகலமாக தொடங்குகிறது. இதனை அடுத்து இதில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்துள்ள தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். போர் விமான இன்ஜின் தயாரிப்பு, ட்ரோன் கொள்முதல், 5ஜி, 6ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்தில் கூட்டாக செயல்படுவது பற்றி அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

g20 summit,delhi ,ஜி20 உச்சி மாநாடு, டெல்லி


ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சிமாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

இதையடுத்து இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடப்பது இதுவே முதல்முறை. இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

Tags :