Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிறுமியின் அறியாமை... தன் பணத்தை செலுத்திய பர்கர் கடை ஊழியர்

சிறுமியின் அறியாமை... தன் பணத்தை செலுத்திய பர்கர் கடை ஊழியர்

By: Nagaraj Mon, 24 Oct 2022 6:37:07 PM

சிறுமியின் அறியாமை... தன் பணத்தை செலுத்திய பர்கர் கடை ஊழியர்

நொய்டா: சிறுமிக்காக தனது பணத்தை போட்டு பர்கர் கொடுத்த ஊழியர் குறித்த வீடியோ செம வைரலாகி வருகிறது. இதை பார்த்த அனைவரும் அந்த ஊழியருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

நொய்டாவில் பொட்டானிக்கல் கார்டன் மெட்ரோ நிலையம் அருகே உள்ள `பர்கர் கிங்' கடைக்குள் நுழைந்த சிறுமி ஒருவர், தன்னுடைய பாக்கெட்டிலிருந்த 10 ரூபாயை எடுத்து பர்கர் ஒன்று கேட்டிருக்கிறார். ஆனால், பர்கரின் விலையோ 90 ரூபாய், இது அந்த சிறுமிக்குத் தெரியாது.


இருப்பினும் சிறுமியின் ஆசையைக்கண்ட கடை ஊழியர், தன்னுடைய பாக்கெட்டிலிருந்து 80 ரூபாயை எடுத்து சிறுமியின் 10 ரூபாயுடன் சேர்த்து, பர்கரின் விலையை சரிகட்டி சிறுமிக்கு பர்கரை வழங்கியிருக்கிறார். மேலும் அந்த ஊழியர், பர்கரின் விலையைப்பற்றி சிறுமியிடம் எதுவுமே கூறவில்லை.

child,employee,burger,happiness,compliments ,குழந்தை, ஊழியர், பர்கர், சந்தோஷம், பாராட்டுக்கள்

இதனைக் கடையில் பார்த்துக்கொண்டிருந்த நெட்டிசன் ஒருவர், அந்தச் சிறுமியைப் படம்பிடித்து, அங்கு நடந்த நிகழ்வை அப்படியே ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பதிவைக்கண்ட பலரும் ஊழியரின் செயலை பாராட்டி கமென்ட் செய்து வருகின்றனர். அதிலும் ஒரு நெட்டிசன், ``மனுஷன் பெருசா நெனைக்ற சந்தோஷத்தோட அதிகபட்ச மதிப்பே குழந்தைங்களோட உலகத்தில 10 ரூபாய் தான்" என கமென்ட் செய்திருக்கிறார்.

Tags :
|
|