Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தங்கக்கடத்தல் ஸ்வப்னாவுக்கு கொரோனா இல்லை; பரிசோதனை முடிவில் அறிவிப்பு

தங்கக்கடத்தல் ஸ்வப்னாவுக்கு கொரோனா இல்லை; பரிசோதனை முடிவில் அறிவிப்பு

By: Nagaraj Mon, 13 July 2020 4:57:20 PM

தங்கக்கடத்தல் ஸ்வப்னாவுக்கு கொரோனா இல்லை; பரிசோதனை முடிவில் அறிவிப்பு

கேரளாவை உலுக்கி வரும் தங்கக்கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய ஸ்வப்னாவை பெங்களூரில் வைத்து கைது செய்தனர். இதையடுத்து அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

நாட்டையே உலுக்கியது கேரளாவின் தங்கக்கடத்தல் சம்பவம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ், தமிழகம் வந்ததாக முதலில் தகவல்கள் வெளியாகின. பின்னர் 2 நாட்கள் முன்பு பெங்களூவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

kerala,gold smuggling,swapna,corona,experiment,results ,கேரளா, தங்கக்கடத்தல், ஸ்வப்னா, கொரோனா, பரிசோதனை, முடிவு

அவருடன் உதவியாளர் சந்தீப் என்பவரும் கைதானார். என்ஐஏ போலீசார் கைது செய்த இருவரையும் கொச்சியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பெங்களூருவில் கைது செய்த இருவருக்கும் முன்னதாக கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்வப்னா, சந்தீப் ஆகியோருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்வப்னாவின் கொரோனா பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி ஆகியுள்ளது.

Tags :
|
|
|