Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மழைக்கால சிறப்பு முகாம்களை டிசம்பர் 31ம் தேதி வரை அரசு ஏற்பாடு

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மழைக்கால சிறப்பு முகாம்களை டிசம்பர் 31ம் தேதி வரை அரசு ஏற்பாடு

By: vaithegi Wed, 25 Oct 2023 2:18:28 PM

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மழைக்கால சிறப்பு முகாம்களை டிசம்பர் 31ம் தேதி வரை அரசு ஏற்பாடு

சென்னை: வருகிற அக்டோபர் 29ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை மழைக்கால சிறப்பு முகாம் ... தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரையிலும் பருவமழை பெய்வது வழக்கமான ஒன்று. பருவமழை காலங்களில் நோய் தொற்று அபாயமும் அதிக அளவில் இருந்து கொண்டு வருகிறது. பொதுவாக இந்த பருவத்தில் டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களின் தாக்கம் மக்களிடையே பரவத் தொடங்கி விடும்.

இந்த நிலையில் தமிழக அரசு நடப்பாண்டுக்கான பருவமழை காலத்திற்கு தேவையான அனைத்து வித முன்னேற்பாடு பணிகளையும் செய்ய தொடங்கி உள்ளது.

monsoon special camp,govt , மழைக்கால சிறப்பு முகாம்,அரசு


மேலும் வருகிற அக்டோபர் 29ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை தமிழகம் முழுவதிலும் 10 வாரங்களில் ஆயிரம் இடங்களில் பத்தாயிரம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த அரசு திட்டமிட்டு உள்ளது.

இதையடுத்து இச்சிறப்பு முகாம்களின் மூலம் மழைக்கால தொற்று நோய்களுக்கு தேவையான சிகிச்சைகளும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையிலான இயற்கை பானங்களும் வழங்கப்பட்டு, மேல் சிகிச்சை தேவைப்படும் நபர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


Tags :