Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இங்கிலாந்து அரசி எலிசபெத் வாழ்ந்த மாளிகையை அருங்காட்சியகமாக்குகிறது மால்டா அரசு

இங்கிலாந்து அரசி எலிசபெத் வாழ்ந்த மாளிகையை அருங்காட்சியகமாக்குகிறது மால்டா அரசு

By: Nagaraj Fri, 31 July 2020 12:07:01 PM

இங்கிலாந்து அரசி எலிசபெத் வாழ்ந்த மாளிகையை அருங்காட்சியகமாக்குகிறது மால்டா அரசு

அருங்காட்சியகமாகிறது... மத்திய தரைக்கடலில் உள்ள மால்டா தீவில், 1949 ஆம் ஆண்டு முதல் 1951 ஆம் ஆண்டு வரை, இங்கிலாந்து அரசி எலிசபெத் வாழ்ந்த இரண்டடுக்கு மாளிகை, அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது.

திருமணமான புதிதில், எலிசபெத் மகாராணியும், அவரது கணவரும், கடற்படை தளபதியுமான பிலிப்பும் வாழ்ந்த மாளிகை. அவர்கள் சென்ற பின் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்தது.

government of malta,tourists,without maintenance,uk ,மால்டா அரசு, சுற்றுலாப்பயணிகள், பராமரிப்பு இன்றி, இங்கிலாந்து

Villa Guardamangia என்றழைக்கப்படும் இந்த சுண்ணாம்பு கட்டிடத்தை, சட்ட போராட்டத்துக்கு பின், 44 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ள மால்டா அரசு, 88 கோடி ரூபாய் செலவில் அதை புனரமைக்க உள்ளது.

மேலும், இங்கிலாந்தில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை இக்கட்டிடம் கவர்ந்திழுக்கும் என மால்டா அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த சுண்ணாம்பு கட்டிடம் சீரமைக்கப்பட்டால் அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வருகை தருவர். இதனால் சுற்றுலா வருவாய் அதிகரிக்கும். மேலும் பல்வேறு வகையிலும் வர்த்தகம் நடைபெறும் என்பதால் இந்த மாளிகையை புனரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags :