- வீடு›
- செய்திகள்›
- இ-பாஸ் ரத்து, பொது போக்குவரத்துக்கு அனுமதி என கூடுதல் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு
இ-பாஸ் ரத்து, பொது போக்குவரத்துக்கு அனுமதி என கூடுதல் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு
By: Nagaraj Sun, 30 Aug 2020 6:47:04 PM
பல்வேறு தளர்வுகள் அறிவிப்பு... தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இ பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வகையில் மாவட்டங்கள் இடையே செல்ல இ பாஸ் தேவையில்லை என அரசு கூறியுள்ளது. வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்குள் வருவோர் இ-பாஸ் எடுத்துவரவேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழகத்தில செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி
நிறுவனங்கள் செயல்படுவதற்கான தடை தொடரும் என அரசு அறிவித்துள்ளது.
திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட தடை
தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வணிக வளாகங்கள், ஷோரூம்கள்
100 சதவிகித பணியாளர்களுடன் இயங்கலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் இனி முழு
பொதுமுடக்கம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று
கடைபிடிக்கப்படும் பொது முடக்கமே கடைசி ஆகும்.
சென்னையில்
செப்டம்பர் 7ஆம் தேதி மெட்ரே ரயில் சேவை இயக்கம் என தமிழக அரசு
கூறியுள்ளது. மாவட்டங்களுக்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள்
இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் ஒன்றாம் தேதி முதல்
பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.. அப்போது கொரோனா
நெறிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம்
முழுவதும் இரவு 8 மணி வரை கடைகள் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.