Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்துவது அரசால் செய்யப்பட வேண்டும் - பிரதமர் மோடி

அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்துவது அரசால் செய்யப்பட வேண்டும் - பிரதமர் மோடி

By: Monisha Tue, 14 June 2022 2:23:30 PM

அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்துவது அரசால் செய்யப்பட வேண்டும் - பிரதமர் மோடி

டெல்லி : இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசை அடிக்கடி விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசின் அனைத்து அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் உள்ள மனித வளங்களின் நிலை குறித்த மதிப்பாய்வு செய்யப்பட்டது.

தற்போது வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் வேலையிழப்பு ஆகியவை வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரித்துள்ளது.

pm-modi,recruitment,10-lakh,govt job,employment ,பிரதமர் மோடி, ஆட்சேர்ப்பு, 10 லட்சம், அரசு வேலை, வேலைவாய்ப்பு

இந்நிலையில், அரசின் பல்வேறுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மிஷன் முறையில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியில் சேர்க்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பிரதமர் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனித வளத்தின் நிலையை மதிப்பாய்வு செய்தார். அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்துவது அரசால் செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :