பனிப்பொழிவில் அழகாக காட்சியளிக்கும் சீனப்பெருஞ்சுவர்
By: Nagaraj Mon, 13 Feb 2023 11:45:05 PM
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் சுற்றுலா தலங்களுக்கு சென்று பனிப்பொழிவை ரசித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சீனாவின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில், பனிப்பொழிவைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வரத் தொடங்கியுள்ளனர்.
சீனப் பெருஞ்சுவரைப் பார்வையிட பலர் ஆர்வமாக உள்ளனர். அங்கு பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், அங்குள்ள அழகிய காட்சியமைப்பு பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ்கின்றனர்.
தொடர் போராட்டங்களுக்குப் பிறகு சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன. இதனால், சீனர்கள் அண்டை நாடுகளுக்கு சுற்றுலா சென்ற நிலையில், ஏராளமானோர் சீனாவுக்கு வந்துள்ளனர்.