Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிச.7-ம் தேதி தொடக்கம்

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிச.7-ம் தேதி தொடக்கம்

By: vaithegi Mon, 20 Nov 2023 11:42:04 AM

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிச.7-ம் தேதி தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது. அதாவது, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு வருகிற டிசம்பர் 7ஆம் தேதி துவங்கி 22ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

மேலும், 6 முதல் 10 -ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 11ஆம் தேதி துவங்கி 21ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த நிலையில், அரையாண்டு தேர்வுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் தற்போது இருந்தே மாணவர்கள் தேர்வுக்கு தயாராக துவங்கிவிட்டனர்.

semester examination,students,time table ,அரையாண்டு தேர்வு,மாணவர்கள்,அட்டவணை

இந்த நிலையில், அரையாண்டு தேர்வு முடிவடைந்து எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை என்பது பற்றிய அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

அதாவது, 6 முதல் 12- ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வருகிற ஜனவரி 2ஆம் தேதி வரையிலும் பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. எனவே அதன்படி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்களும், 6 முதல் 10 -ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு 11 நாட்களும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :