Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அல்கொய்தா அமைப்பு ஆப்பிரிக்க பிரிவு தலைவர் பிரான்ஸ் படைகளால் கொல்லப்பட்டார்

அல்கொய்தா அமைப்பு ஆப்பிரிக்க பிரிவு தலைவர் பிரான்ஸ் படைகளால் கொல்லப்பட்டார்

By: Nagaraj Sun, 07 June 2020 11:05:15 AM

அல்கொய்தா அமைப்பு ஆப்பிரிக்க பிரிவு தலைவர் பிரான்ஸ் படைகளால் கொல்லப்பட்டார்

அல்கொய்தா அமைப்பின் ஆப்பிரிக்கப் பிரிவு தலைவர் அப்தெல்மலேக் பிரான்ஸ் படைகளால் கொல்லப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்கொய்தாவின் வட ஆப்பிரிக்க தலைவராகச் செயல்பட்டு வந்த அப்தெல்மலேக் ட்ரூக்டெலை கடந்த 7 ஆண்டுகளாக பிரான்ஸ் படைகள் தேடி வந்தன. இவரைப் பிடிக்கவோ அல்லது கொல்வதற்காகவோ ஆப்பிரிக்க நாடான மாலியில் ஏராளமான வீரர்களை பிரான்ஸ் அனுப்பி வைத்திருந்தது.

france,notification,defense,minister,algerian border ,பிரான்ஸ், அறிவிப்பு, பாதுகாப்புத்துறை, அமைச்சர், அல்ஜீரிய எல்லை

இந்நிலையில் மாலி மற்றும் அல்ஜீரிய எல்லைப் பகுதியில் உள்ள சஹாரா சஹேல் பகுதியில் அப்தெல்மலேக் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து பிரான்ஸ் விமானப்படையினர் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் அப்தெலும் மற்றும் சில உறுப்பினர்களும் நிகழ்விடத்திலேயே கொல்லப்பட்டதாக பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஃபிளாரன்ஸ் பார்லி தெரிவித்துள்ளார்.

Tags :
|