Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வடகிழக்கு பருவமழை தொடக்கதிற்கு முன்பிருந்தே சுகாதாரத்துறை மழைக்கால நோய் தடுப்பு பணிகளை செயல்படுத்தி வருகிறது

வடகிழக்கு பருவமழை தொடக்கதிற்கு முன்பிருந்தே சுகாதாரத்துறை மழைக்கால நோய் தடுப்பு பணிகளை செயல்படுத்தி வருகிறது

By: vaithegi Sat, 11 Nov 2023 5:45:52 PM

வடகிழக்கு பருவமழை தொடக்கதிற்கு முன்பிருந்தே சுகாதாரத்துறை மழைக்கால நோய் தடுப்பு பணிகளை செயல்படுத்தி வருகிறது

சென்னை: அடுத்த 1 மாதத்தில் 152 புதிய மருத்துவமனைகள் ..தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார்.இதையடுத்து அவர் கூறுகையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பெயரில் வாரந்தோறும் தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பருவமழை தொடங்குவதற்கு முன்னரே மருத்துவ முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே 2 வார முகாம்கள் முடிந்த நிலையில், இன்று 3வது வாரமாக மருத்துவ முகாம்கள் துவங்கப்பட்டுள்ளன.

வாரம் 1000 முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்வாரம் 1900 முகாம்கள் நடத்தப்பட்டன. 2-ம் வாரம் 2200 முகாம்கள் நடத்தப்பட்டன. டிசம்பர் மாதம் வரையில் பருவமழை தொடரும் என்பதால் டிசம்பர் மாத இறுதி வரையில் மருத்துவ முகாம்கள் தொடரும்.

monsoon disease prevention work,health department,northeast monsoon ,மழைக்கால நோய் தடுப்பு பணி,சுகாதாரத்துறை ,வடகிழக்கு பருவமழை

பருவகால நோய்களான மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு, சேத்துப்புண் ஆகிய நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளன. எனவே இதனை தடுக்கவே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இம்மருத்துவ முகாம்கள் மூலம் 1 லட்சத்திற்கும் மேலான மக்கள் பயன் பெற்றுள்ளனர். இதில் 300 – 400 பேர் காய்ச்சல் பாதிப்பு அடைந்தவர்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்ததாக வரும் நவம்பர் 25ஆம் தேதி, டிசம்பர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் மருத்துவ முகாம்கள் நடைபெறும். 4076 மருத்துவ குழுக்கள் தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்களில் பணியாற்றி கொண்டு வருகின்றனர். 805 நடமாடும் மருத்துவ வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

2012 முதல் 2017 காலகட்டத்தில் அதிக டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் தற்போது முதல்வரின் நடவடிக்கையில் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து டெல்லியை போல, தமிழகத்திலும் நகர்ப்புற நல்வாழ்வு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஒரு மாதத்தில் சென்னையில் 40 மருத்துவமனைகள், 112 மருத்துவமனைகள் என்று மொத்தம் 152 புதிய மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :