Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிடுகிறார் உயர்கல்வித்துறை அமைச்சர்

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிடுகிறார் உயர்கல்வித்துறை அமைச்சர்

By: vaithegi Mon, 26 June 2023 09:59:35 AM

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிடுகிறார் உயர்கல்வித்துறை அமைச்சர்

சென்னை: தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு ..... பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ம் தேதி தொடங்கி ஜூன் 4-ம் தேதி நிறைவடைந்தது. 2023-24ம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு கடந்த மே 5-ம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். எனவே அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இணைப்பு பெற்று உள்ள 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 1.5 லட்சம் இடங்களுக்கு தொடர்ந்து மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

இதையடுத்து பொதுவாக பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் வழங்கப்படும். அதன்பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். ஒரே கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று இருந்தால் , அவர்கள் பெற்ற மதிப்பெண் பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

minister of higher education,engineering ,உயர்கல்வித்துறை அமைச்சர் ,பொறியியல் படிப்பு

ஆனால் 2023-24-ஆம் கல்வியாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கும் போது 10-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதிலிருந்து விலக்களித்து, மாணவர் சேர்க்கைக்கான விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. எனவே இதன் மூலம் பொறியியல் மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் மாற்றம் செய்து உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் 2023 - 24 ஆம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் இன்று http://tneaonline.org என்ற இணையதளத்தில் இன்று வெளியாகிறது. தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிடுகிறார்.

Tags :