Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விமான நிலையத்திலேயே கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய ஹாங்காங் முடிவு

விமான நிலையத்திலேயே கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய ஹாங்காங் முடிவு

By: Nagaraj Thu, 14 May 2020 7:58:40 PM

விமான நிலையத்திலேயே கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய ஹாங்காங் முடிவு

விமான நிலையத்திலேயே பரிசோதனை... விமானம் மூலம் ஹாங்காங் வந்தடையும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஹாங்காங்கில் இதுவரை சுமார் 1,051 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 4 பேர் உயிரிழ்துள்ளனர்; 1,008 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது, வைரஸ் பரவல் பெருமளவு கட்டுக்குள் வந்துள்ளதால், விமான போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலமாக ஹாங்காங் வந்தடையும் அனைத்து பயணிகளுக்கும், விமான நிலையத்திலேயே கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே, பயணிகள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர். 'பரிசோதனை முடிவுகளுக்காக விமான நிலையத்திலேயே எட்டு மணி நேரம் வரை காக்க வைக்கப்படுகிறோம்.

hong kong,appreciation,airport,inspection,corona ,ஹாங்காங், பாராட்டு, விமான நிலையம், பரிசோதனை, கொரோனா

பயணிகளைக் கண்காணிக்க, அவர்களது மொபைல்போனில் பிரத்யேக செயலி நிறுவப்படுகிறது. மேலும், கண்காணிப்பு பிரேஸ்லெட் ஒன்றையும் தொடர்ந்து அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது' என, பயணிகள் சிலர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இவர்கள் பதிவிட்ட, விமான நிலையத்தில் காத்திருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

காத்திருப்பதற்காக பயணிகள் வருத்தப்பட்டாலும், விமானத்தில் வரும் அனைத்து பயணிகளையும் பரிசோதிக்கும் ஹாங்காங் அரசை, உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Tags :