குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் பெற்றோருக்கு ரூ.122 கோடி நஷ்டஈடு வழங்கிய மருத்துவமனை
By: Nagaraj Mon, 08 May 2023 7:40:46 PM
அமெரிக்கா: நஷ்ட ஈடு வழங்கிய மருத்துவமனை... தூக்கம் தொடர்பான ஆய்வின் போது மூச்சுத் திணறி குழந்தை உயிரிழந்த நிலையில், அமெரிக்க மருத்துவமனை ஒன்று பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு 122 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கி உள்ளது.
உடல் வளர்ச்சிக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஆறு மாத குழந்தையை போஸ்டன் குழந்தைகள் நல மருத்துவமனை, தூக்கம் தொடர்பான ஆய்விற்கு உட்படுத்தியது.
அப்போது, போதிய ஆக்சிஜன் இல்லாமல் சுமார் 30 நிமிடங்கள் வரை போராடிய அக்குழந்தை, இறுதியில் உயிரிழந்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த மசாசூசெட்ஸ் மாகாண பொது சுகாதாரத் துறை, ஊழியர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது.
Tags :
child |
casualty |
hospital |
parent |