Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மனைவியின் உருவ சிலையை ரூ.2.50 லட்சம் மதிப்பில் சிலிக்கானில் செய்த கணவர்

மனைவியின் உருவ சிலையை ரூ.2.50 லட்சம் மதிப்பில் சிலிக்கானில் செய்த கணவர்

By: Nagaraj Mon, 02 Jan 2023 11:06:47 AM

மனைவியின் உருவ சிலையை ரூ.2.50 லட்சம் மதிப்பில் சிலிக்கானில் செய்த கணவர்

கொல்கத்தா: 30 கிலோ எடையில் ரூ.2.50 லட்சம் செலவில் மனைவியின் உருவச்சிலையை சிலிக்கானில் செய்துள்ளார் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் ஒருவர்.

கொல்கத்தா மேடம் டுசாட்ஸ் பகுதியை சேர்ந்தவர் தாபஸ் (65). ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவரது மனைவி இந்திராணி. கணவன்-மனைவி இருவரும் மாயாப்பூரில் உள்ள இஸ்கான் கோயிலுக்குச் சென்றனர். அங்குள்ள கிருஷ்ணர் சிலையை பார்த்த இந்திராணி, தான் இறந்த பிறகு தனக்கும் அப்படிப்பட்ட சிலையை உருவாக்க வேண்டும் என்று கணவரிடம் கூறினார்.

கடந்த 2021ம் ஆண்டு இந்திராணி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மே 4ம் தேதி இறந்தார். தன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற, தாபஸ் அவருக்கு சிலிக்கான் சிலை செய்ய பல்வேறு சிற்பிகளை ஆன்லைனில் தேடினார்.

silicon,statue,tapas ,
silicon, statue, Tapas, சிலிக்கான், சிலை, தாபஸ், மனைவி, உருவாக்கினார்

அவர் தேடிய அனைத்து சிற்பிகளும் மகாத்மா காந்தி, அமிதாப் பச்சன், ஷாருக்கான் மற்றும் பிறரின் மெழுகு உருவங்களைக் காட்டினர். ஆனால் தாபஸ் தனது மனைவியின் சிலையை சிலிக்கானில் செய்ய விரும்பினார்.


இதையடுத்து, சிலிக்கான் சிலையை உருவாக்க சுபிமல் தாஸ் என்ற சிற்பி ஒப்புக்கொண்டார். 30 கிலோ எடையில் ரூ.2.50 லட்சம் செலவில் இந்திராணியின் சிலிக்கான் சிலை உருவாக்கப்பட்டது.

தாபஸ் வீட்டின் வராண்டாவில் சோபாவில் அமர்ந்திருக்கும் இந்திராணியின் சிலை காணப்படுகிறது. இதை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். இதுகுறித்து தாபஸ் கூறுகையில், இந்த சிலை எனது மனைவி எப்போதும் என்னுடன் இருப்பதை உணர வைக்கிறது என்றார்.

Tags :
|