Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேன்சர் பாதிப்பு மத்திய கிழக்காசிய நாடுகளில் மிகவும் குறைவு: இதற்கு காரணம் என்ன?

கேன்சர் பாதிப்பு மத்திய கிழக்காசிய நாடுகளில் மிகவும் குறைவு: இதற்கு காரணம் என்ன?

By: Nagaraj Sun, 12 June 2022 10:56:45 PM

கேன்சர் பாதிப்பு மத்திய கிழக்காசிய நாடுகளில் மிகவும் குறைவு: இதற்கு காரணம் என்ன?

நியூயார்க்: கேன்சர் பாதிப்பு குறைவான நாடு...உலகத்தில் உள்ள எல்லா நாடுகளையும் விட, கேன்சர் பாதிப்பு மத்திய கிழக்காசிய நாடுகளில் மிகவும் குறைவு. இத்தனைக்கும் இந்த நாடுகளில் சர்க்கரையின் பயன்பாடு மிகவும் அதிகம்.

வெள்ளைச் சர்க்கரை தான் கேன்சர் செல்கள் அபரிமிதமாக வளர்வதற்கு பிரதான காரணம். ரத்தத்தில் உள்ள குளூக்கோசை அதிக அளவில் உறிஞ்சி, அபரிமிதமாக வளரும் தன்மை இயல்பாகவே கேன்சர் செல்களுக்கு உண்டு. ஆனாலும் கேன்சர் பாதிப்பு இங்கு குறைவாக இருப்பது எதனால் இப்படி? முதல் காரணம் ரமலான் விரதம். 30 நாட்கள் தொடர்ந்து, சூரியன் உதிக்கும் முன், மறைந்த பின் என்று இடைக்கால விரதம் இருக்கின்றனர்.

விரதம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. செல்களுக்குத் தேவையான சக்தியை உயிர் வேதிப் பொருட்கள் வாயிலாக, செல்களில் உள்ள இரண்டு அடுக்கு மைட்டோகாண்ரியா தருகிறது. கேன்சர் செல் வளரும் போது இதை அழித்து விடும்.விரத நாட்களில், குளூக்கோஸ் குறைவதால், சிதைந்த செல்கள் புதுப்பிக்கப்பட்டு, கேன்சர் செல்களை அழிக்கிறது. பொதுவாகவே உடல் நலம் சரியில்லை என்றால் சாப்பிட விருப்பம் இருக்காது.

cancer,chemicals,impact,middle east,countries ,கேன்சர், வேதிப்பொருட்கள், பாதிப்பு, மத்திய கிழக்கு, நாடுகள்

பட்டினி இருக்கும் போது, அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, நோய் உண்டாக்கும் கிருமிகளை, காரணியை அழித்து விடுகிறது. அடுத்தது, அதிக அளவில் இவர்கள் பயன்படுத்தும் மஞ்சள், குங்குமப் பூ, ஏலக்காய், ஜாதிக்காய், பட்டை, தனியா, ஆளி விதைகள், பழங்கள், எள், பேரீச்சை உட்பட உலர் பழங்கள்.

இவை அனைத்திலும் கேன்சருக்கு எதிரான வேதிப்பொருட்கள் இயற்கையாகவே உள்ளன.

cancer,chemicals,impact,middle east,countries ,கேன்சர், வேதிப்பொருட்கள், பாதிப்பு, மத்திய கிழக்கு, நாடுகள்

சவுதி அரேபியா, ஏமன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் போன்ற நாடுகளில், புகையிலை பயன்பாடு பெண்கள் மத்தியில் அரிது. புகையிலைப் பொருட்கள், 22 மடங்கு கேன்சர் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிகரெட்டில், 5,000 வேதிப் பொருட்கள் கலந்து உள்ளன. இவை நேரடியாக கேன்சரை உண்டாக்குபவை. ஆறு விதமான கேன்சரை உண்டாக்கும் மது அருந்துவதற்கு, பல மத்திய கிழக்கு நாடுகளில் தடை உள்ளது.

Tags :
|
|