Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஈரானில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக குறைந்து வருகிறது

ஈரானில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக குறைந்து வருகிறது

By: Nagaraj Tue, 01 Sept 2020 08:42:39 AM

ஈரானில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக குறைந்து வருகிறது

3 மாதங்களுக்கு பின் கொரோனா தொற்று குறைந்தது... ஈரானில் கடந்த சில நாட்களாகவே 2,000க்கு உள்ளாகவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு கொரோனா தொற்று குறைந்து உள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதார அமைப்பு தரப்பில் கூறும்போது, ' ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,642 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 109 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் 3,75,212க்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21,571 பேர் பலியாகி உள்ளனர். 323,233 பேர் குணமடைந்துள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

iran,tehran,corona,vulnerable,at least,border area ,ஈரான், தெஹ்ரான், கொரோனா, பாதிப்பு, குறைந்தது, எல்லைப்பகுதி

மத்தியக் கிழக்கு நாடுகளில் கொரோனாவால் அதிக அளவில் ஈரானும், சவுதியும் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், மத்தியக் கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்து. இதனால் கொரோனா தொற்று அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

Tags :
|
|
|