Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இளம்பெண்ணை மணந்த முதியவர் ஒரே மாதத்திற்குள் பிரிந்து சென்ற சம்பவம்

இளம்பெண்ணை மணந்த முதியவர் ஒரே மாதத்திற்குள் பிரிந்து சென்ற சம்பவம்

By: Nagaraj Thu, 05 Nov 2020 10:04:10 PM

இளம்பெண்ணை மணந்த முதியவர் ஒரே மாதத்திற்குள் பிரிந்து சென்ற சம்பவம்

17 வயது பெண்ணை திருமணம் செய்த 78 வயது முதியவர் ஒரே மாதத்தில் பிரிந்து சென்ற சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. இதற்கு பொருள் தெய்வ நிச்சதப்படி திருமணம் நடக்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. ஆனால் அது அனைவருக்கும் பொருந்தும் என்று சொல்லிவிட முடியாது.

ஏனெனில், ஆரம்பகாலத்தில் இருந்தே இந்தோனேசியாவில் நடக்கும் திருமணங்கள் எப்போதும் தனித்துள்ளன. இந்தோனேசியாவைச் சேர்ந்த 78 வயதான முதியவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். ஒரு மாதத்திற்குள், இந்த ஜோடி தனித்தனி வழிகளில் சென்றுவிட்டது.

elderly,teenage,married,indonesia,photos ,முதியவர், இளம்பெண், திருமணம், இந்தோனேசியா, புகைப்படங்கள்

திருமணமான 22 நாட்களுக்குள் தனது மனைவியை பிரிந்து செல்ல அந்த நபர் முடிவு செய்துள்ளார். கடந்த மாதம் திருமணம் செய்துகொண்ட அபா சர்னா மற்றும் அவரது மனைவி நோனி நவிதா என்ற தம்பதியினர் கடந்த வாரம் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த புதுமணத் தம்பதியினர் அவர்களின் வயது வித்தியாசம் காரணமாக மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தனர்.

ஆனால் சில நாட்களுக்குள்ளாகவே அபா விவாகரத்து கடிதத்தை நோனிக்கு அனுப்பிய விவகாரம், அவர்களது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருவருக்கு இடையில் எந்தஒரு பிரச்சனையும் இல்லாத போது ஏன் அவர் இவ்வாறு செய்தார் என்று பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரியவில்லை.

இது குறித்து நோனியின் சகோதரி ஐயன் கூறுகையில், இருவருக்கும் இடையில் பெரிய சச்சரவுகள் போன்ற எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. ஆனால் திடீரென்று இப்படியொரு செயலை கண்டு அதிர்ச்சியடைந்தேன். ஆச்சரியம் என்னவென்றால், இருவருக்கும் வயது வித்தியாசம் இருந்தபோதிலும் எங்கள் குடும்பத்திற்கு அபா சர்னாவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை.

இருப்பினும், இந்த பிரச்சினை அபா சர்னா மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து வந்துள்ளது. அவர்கள் திருமணத்தை எதிர்த்ததாக தோன்றுகிறது என்று அவர் கூறியுள்ளார். திருமணத்திற்கு முன்னர் நோனி கர்ப்பமாக இருந்ததால் அந்த தம்பதியினர் பிரிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருப்பினும், இந்த குற்றச்சாட்டினை நோனி சகோதரி ஐயன் மறுத்துள்ளார். திருமணத்தின் போது அபா ஒரு மோட்டார் சைக்கிள், மெத்தை, கிளோசெட் மற்றும் இந்தோனேசியா பணம் RM 2,819 (இந்திய மதிப்பில் ரூ .50,000) ஆகியவற்றை நோனிக்கு கொடுத்திருந்தார்.

இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த வரதட்சணை பொருட்கள் ஒரு டிரக் மூலம் திருப்பி கொண்டு செல்லப்பட்டன. அதன் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Tags :