Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தக்காளி வரத்து உயர்வு .. தமிழகம் முழுவதும் உச்சத்தில் இருந்த தக்காளி விலை குறைந்தது

தக்காளி வரத்து உயர்வு .. தமிழகம் முழுவதும் உச்சத்தில் இருந்த தக்காளி விலை குறைந்தது

By: vaithegi Sat, 12 Aug 2023 09:38:59 AM

தக்காளி வரத்து உயர்வு   ..  தமிழகம் முழுவதும் உச்சத்தில் இருந்த தக்காளி விலை குறைந்தது

சென்னை: வட மாநிலங்களில் பெய்து வந்த கனமழை மற்றும் தக்காளி விளைச்சல் பாதிப்பு காரணமாக தக்காளியின் விலை கடுமையாக அதிகரித்தது. தமிழகத்தை பொறுத்தவரை தக்காளி விலை கிலோ ரூ. 150 பின், கிலோ 180 மற்றும் ரூ.200 என தொடர்ந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வந்தது.

இதையடுத்து சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தும் தக்காளி விலை உயர்வு இல்லத்தரசிகள், நடுத்தரவர்கத்தினரிடையே மிக பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. தக்காளியின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகள் மற்றும் நியாய விலை கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

tomato price and sale ,தக்காளி விலை,விற்பனை

எனினும் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் வரத்து குறைவாகவே இருந்ததால், விலை தொடர்ந்து ரூ.100ஐ தாண்டியே விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை குறைந்து வருகிறது. அந்தவகையில் கிலோ.70 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி விலை நேற்றைய தினம் கிலோவுக்கு ரூ.10 குறைந்து, 1 கிலோ தக்காளி 60ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தக்காளி வரத்து சீரானதால் சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ.45க்கும் , பொடி தக்காளி கிலோ ரூ.20க்கும் விற்பனையாகிறது.

மேலும் பெரும்பாலான கடைகளில் தக்காளி கிலோ ரூ.40க்கு விற்பனையாகிறது. கடலூர் துறைமுகம் சாலக்கரை பகுதியில் உள்ள கடையில், ஒரு கிலோ தக்காளி ₹20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்ந்து உள்ள நிலையில், இங்கு குறைந்த விலையில் தக்காளி கிடைப்பதால், பொதுமக்கள் போட்டிப் போட்டுக்கொண்டு தக்காளி வாங்க குவிந்தனர்.

Tags :