Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவில் 10ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரளாவில் 10ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

By: vaithegi Tue, 06 June 2023 3:11:21 PM

கேரளாவில் 10ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரளா: தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளா தெற்கு கர்நாடகாவின் உள்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது .

மத்திய கிழக்கு அரபிக்கடலில் தாழ்வு தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் .

india meteorological department,kanamagh , இந்திய வானிலை ஆய்வு மையம்,கனமழை

இதையடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி மும்பையில் இருந்து தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 1120 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை முதல் வருகிற 10-ம் தேதி வரை கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறி உள்ளது.


Tags :