Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

By: vaithegi Mon, 03 Oct 2022 4:26:33 PM

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

புதுடெல்லி: வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதி தொடங்க வாய்ப்பு .... இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 01 ஆம் தேதி முதல் செப்டெம்பர் 30 ஆம் தேதி வரை தென்மேற்கு பருவமழை காலம் எனவும், இதையடுத்து அக்டோபர் 01 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலம் எனவும் கணக்கிடப்படுகிறது.

எனவே அதன் படி, நேற்றுடன் தென் மேற்கு பருவமழை முடிவடைந்து, இந்திய நிலப்பரப்பில் இருந்து விலகி வருவதால், அக்டோபர் 15ம் தேதிக்கு பின் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று கூறப்பட்டது.

india meteorological department,northeast monsoon ,இந்திய வானிலை ஆய்வு மையம், வடகிழக்கு பருவமழை

மேலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 45% அதிக மழை பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த 122 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழை எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதனை அடுத்து இந்தநிலையில், அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.

Tags :